நடிகர் சிபிராஜ் மாயோன் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் சிபிராஜ் . தற்போது இவர் ரேஞ்சர், மாயோன் உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் மாயோன் படத்தை அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Completed dubbing for #Maayon!More updates soon😊🙏🏻 @DirKishore pic.twitter.com/0qD2nSiGcZ
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) July 25, 2021
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சிபிராஜ் மாயோன் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அதில் விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.