நடிகர் குமரராஜன் மாரடைப்பால் மட்டுமே உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழ் நடிகரும் தயாரிப்பாளருமான குமரராஜன் நாமக்கல்லில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக. இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மாரடைப்பால் மட்டுமே உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.இவர் சந்தித்ததும் சிந்தித்ததும் என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். மேலும் துப்பார்க்குத் துப்பாய, ரெண்டுல ஒன்னு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.