Categories
சினிமா

மாரடைப்பில் இறந்த டைரக்டர் சித்துவின் உடல் அடக்கம்…. வெளியான தகவல்…. சோகம்….!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடி அருகேயுள்ள சிவகிரியை சேர்ந்தவர் சித்து என்ற சித்தேஸ்வரன் (60). இவர் பிரபல இயக்குனர் கங்கை அமரனிடம் உதவி இயக்குனராக கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணிபுரிந்து வந்தார். இதையடுத்து அவர் 1997ல் விக்னேஷ், தேவயானி நடித்த காதலி என்ற படத்தை இயக்கினார். மேலும் மன்சூர் அலிகானை கதாநாயகனாக நடிக்க வைத்த ஆனா அந்தமடம் ஆகாட்டி சந்தை மடம் என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சில காரணங்களால் வெளியாகாமல் போனது.

அதனை தொடர்ந்து சின்னத் திரையில் ரோஜா உள்ளிட்ட பல தொடர்களுக்கு கதை வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் இருந்துள்ளார். இப்போது சித்து பாரதிராஜா நடிப்பில் கடைமடை எனும் பெயரில் கிராமத்து படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சித்துவுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் காலமானார்.

அதன்பின் இயக்குனர் சித்துவின் உடல் அவரது சொந்த ஊரான சிவகிரிக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இவரது உடலுக்கு சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு சித்துவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவருடைய தம்பி பொன்.ஆதி.ஆறுமுகம் இயக்கத்தில் இன்னும் சில மாதங்களில் வெளிவரவுள்ள பனை திரைப்படத்தில் இறந்த சித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |