Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மாரடைப்பை ஏற்படுத்தும் குறட்டை… ஆயுர்வேத முறைப்படி எப்படி சரி செய்வது…?

உறங்கும்போது பலருக்கும் ஏற்படும் பிரச்சனை குறட்டை. இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கும் எளிய வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தூக்கத்தில் குறட்டை விடுவது என்பது சர்வசாதாரணமாகிப் போன நிலையில் இது அருகில் இருப்பவர்கள் சற்று அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குறட்டையால் நமக்கு ஆரோக்கியமான தூக்கம் இல்லாமல் அன்றைய நாள் சோர்வடைய வாய்ப்புகள் உள்ளன. இதனால் உடல்நிலை குறைவு ஏற்படுகிறது.

‘ஸ்லீப் அப்னியா’ என்ற அழைக்கப்படும் அதிக சத்தமான குறட்டை தூக்க கோளாறுக்கு வழிவகுக்கும். இந்த கோளாறின் காரணமாக மூச்சுவிடும் போது சுவாசம் தடைபட்டு மீண்டும் தொடங்குவதால் இது மிகவும் ஆபத்து என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். குறட்டையை முடிந்த அளவில் குறைக்க ஆய்வுகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அதற்கான வழிமுறைகளையும் தெரிவித்துள்ளனர்.

இந்த எளிய முறையை பின்பற்றுங்கள்:

‘நேஷனல் சென்டர் ஃபார் பயோடெக்னாலஜி இன்ஃபர்மேஷன்’ குறட்டையை குறைக்க ஒரு  எளிய வழியை கண்டறிந்துள்ளது. ஒரு நாளைக்கு அதிக நேரம் நிற்கும்போதும், உட்காரும்போதும் கால்களை நகர்த்திக் கொண்டே இருப்பதன் மூலம் இரவில் குறட்டை விடுவது குறைகிறதாம். அது எப்படி ? என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த ஆய்விற்காக இரவில் குறட்டை விடும் சுமார் 16 பேரை தேர்வு செய்து அவர்களின் கால்களின் பின் பகுதியில் இருக்கும் திரவத்தின் அளவை குறைத்து வைத்துள்ளனர். பின்னர் அனைவரையும் 4 மணி நேரத்திற்கு உட்கார வைத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் குறட்டை விடும் நேரம் குறைந்துள்ளது. மேலும் இவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து பாதிப்பேரை தரையில் கால்களை அழுத்தமாக வைத்தும்,  மீதி பாதிப்பேரை சாதாரணமாகவும்  அமர வைத்துள்ளனர். பிறகு ஒரு வாரம் கழித்து முதல் குழுவை சேர்ந்தவர்கள் சாதாரணமாகவும், இரண்டாவது குழுவை கால்களை தரையில் அழுத்தமாக வைக்க  சொல்லி இருக்கின்றனர்.

ஆரம்பத்திலிருந்து இந்த இரண்டு குழுக்களின் திரவத்தின் அளவை குறித்து வைக்கப்பட்டு வந்த நிலையில் ஆய்வு முடிவில் கால்களை தரையில் அழுத்தமாக வைத்தவர்களின் குறட்டை நேரம் குறைவதை கண்டறிந்தனர். கால்களை சாதாரணமாக வைத்திருப்பவர்களின் திரவங்கள் பின் பகுதியில் தங்கி விடுகின்ற காரணத்தால் இந்த  திரவம் உணவுக் குழாயை குறுக்குகிறது.

இதனால் காற்று தொண்டையில் வேகமாக பயணிக்கின்றது. இதன் காரணமாகவே நாம் குறட்டை விடுகிறோம். அதே நேரத்தில் கால்களை அழுத்தமாக வைத்திருப்பவர்களின் திரவம் தங்குவது குறைவதால் குறட்டை விடுவது குறைகிறது.

இதனை குடிங்க குறட்டை வராது:

உறங்குவதற்கு முன்பாக ஒரு கப் இஞ்சி, தேன் கலந்த தேநீரை அருந்துவதால் குறட்டை விடுவதில் இருந்து நிவாரணம் பெறலாம். இஞ்சி வாயில் உமிழ்நீர் சுரப்பதை அதிகரிக்கும் இதனால் குறட்டை விடுவதில் ஏற்படும் அழற்சியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பழங்கள் சாப்பிடுவதால் பயன்:

அன்னாசி, ஆரஞ்சு பழங்களில் உள்ள மெலனின் உறக்கத்தை தூண்டும் தன்மை கொண்டது. உறங்குவதற்கு முன்பாக இந்த பழங்களை சிறிதளவு எடுத்துக் கொண்டால் நல்ல உறக்கம் வருவதோடு, குறட்டை குறையும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Categories

Tech |