மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஆலையின் மூலமாக சுமார் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி ஹரியானா மாநிலம் கார்கோடா பகுதியில் 18 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய கார் ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றது. இதற்காக 2,131 கோடி ரூபாயை ஹரியான அரசிற்கு மாருதி சுசுகி நிறுவனம் செலுத்தி இருக்கின்றது. அடுத்த 8 வருடங்களில் இந்த ஆலை முழுவீச்சில் 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் எனவும் மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் முதற்கட்ட உற்பத்திக்காக 11 ஆயிரம் கோடி ரூபாயை மாருதி சுசுகி முதலீடு செய்கிறது. இந்த தொகைநிலை உட்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகளுக்காக பயன்படுத்தப்படும். மேலும் முதற்கட்டத்தில் 2.5 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. 2025 ஆம் வருடம் முதல் முதற்கட்ட உற்பத்தி தொடங்கப்படுகிறது. 2026 வருடம் முதல் இரண்டாம் கட்ட உற்பத்தி தொடங்கும்.
இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மேலும் மாருதியின் இந்த புதிய ஆலையில் சுமார் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில் ஏற்கனவே குருகிராமில் உள்ள ஆலையும் தொடர்ந்து இயங்கும் என மாருதி சுசுகி அறிவித்துள்ளது.