Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மார்கழி மாதத்தை முன்னிட்டு…. திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி…. கோவில்களில் சிறப்பு வழிபாடு…!!

மார்கழி மாதம் என்பதால் பெருமாள் கோவில்களில் திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மார்கழி மாதத்தை முன்னிட்டு  திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சவுமிய பெருமாள் கோவில், திருப்பத்தூர் நின்ற நாராயண பெருமாள் கோவில் மற்றும் அரியக்குடியிலுள்ள திருவேங்கடமுடையான் கோவில் போன்றவற்றில்  நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் பெண்கள் வீட்டு வாசலில் அரிசி மாவு கோலம் போட்டு அந்தக் கோலத்தின்  நடுவே மாட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் பூசணிப் பூவை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

Categories

Tech |