Categories
மாநில செய்திகள்

மார்கெட்டுகளில் 50% கடைகள்…. சுழற்சி முறையில் மட்டுமே…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததையடுத்து தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததனால் பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. ஆனால் கேரளாவில் மட்டும் தொற்று குறைந்தபாடில்லை. முதல் அலையை மிகச் சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.

இவ்வாறு கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்திலும் பரவ வாய்ப்புள்ளதால், ஒருசில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். அதன்படி கோவை மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மார்க்கெட்டுகளில் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். உழவர் சந்தைகளில் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதி. வாரசந்தைகள் இயங்க தடை. பொள்ளாச்சியில் மாட்டு சந்தை இயங்க தடை என அறிவித்துள்ளார்.

Categories

Tech |