பூக்களின் விலை ரூபாய் 200 வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஈஸ்டர் மற்றும் இன்று சித்ரா பௌர்ணமி காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை, கோயம்பேடு சந்தையில் நேற்று 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ இன்று ரூபாய் 500க்கு விற்பனையாகி வருகிறது. இதை தொடர்ந்து சில பூக்களின் விலை ரூபாய் 70 முதல் 100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பன்னீர் ரோஜா ரூபாய் 200 ரூபாயும், அரளிப்பூ ரூபாய் 200 ரூபாயும், சாமந்தி ரூபாய் 200 ரூபாயும், கனகாம்பரம் ரூபாய் 400 ரூபாயும், சாக்லேட் ரோஜா 140 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
Categories