Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மார்க்கெட் செல்வோர் உஷார்…! ரசாயனம் கலந்த காய்கறி…. அதிகாரிகள் கடும் எச்சரிக்கை…!!

கோயம்பேடு சந்தையில் கெமிக்கல் கலந்த டபுள் பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி 400 கிலோவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை  மாவட்டம்  கோயம்பேடு  சந்தையில்  மாவட்ட  நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, பாதுகாப்பு  அலுவலர் என 10 க்கும்  மேலான அதிகாரிகள். திடீரென நேற்று முன்தினம்  காலையில்  100 – க்கும் மேற்றப்பட்ட  கடைகளில்  சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது 50 கடைகளில் பச்சை நிற கெமிக்கல் கலந்த பச்சை பட்டாணிகளிலும் ரோஸ் கலர் கெமிக்கல் கலந்த டபுள் டபீன்ஸ்  ஆகியவை 400 கிலோக்கு  மேலாக பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், கூறுகையில் விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி அதில் கெமிக்கல்களை கலந்து விற்பனை செய்வதாகவும்  அதை வாங்கி உண்ணும் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படக்கூடும் என்று கூறியுள்ளார். இவ்வாறு கெமிக்கல் கலந்த  உணவு பொருட்களை விற்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார்.

Categories

Tech |