Categories
அரசியல் மாநில செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…. வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. நேற்று திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் திருப்பரங்குன்றம் – எஸ்.கே பொன்னுத்தாய் , கந்தர்வகோட்டை-எம்.சின்னத்துரை,  திண்டுக்கல் என்.பாண்டி, கோவில்பட்டி-கே. சீனிவாசன், ஆரூர் – குமார், கீழ்வேளூர்- நாகை மாலி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Categories

Tech |