மார்ச் 1-ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெவ்வேறு நோய் உள்ள 45 வயது மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ஜவடேகர் இதை தெரிவித்தார். இவர்களுக்கான தடுப்பூசி அரசின் 10000 தடுப்பூசி மையங்களில் இலவசமாக போடப்படும். இவர்கள் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியாரில் தடுப்பூசி போட விரும்புபவர்கள், அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனப் பிரகாஷ் ஜவ்டேகர் கூறினார். அது எவ்வளவு என்பது குறித்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் விவாதித்த பின்னர் சுகாதாரத்துறை அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்