திருவாரூர் மாவட்டத்திற்கு மார்ச் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோவிலில் ஆழித் தேரோட்டம் மார்ச் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தியாகராஜர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வருகிற 15-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஆழித்தேருடன் விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து தேர்களின் கூரை பிரிக்கப்பட்டு அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.