அந்தியோதயா விரைவு ரயிலில் மார்ச் 16ஆம் தேதி முதல் முன்பதிவு இன்றி பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள வழித்தடங்களில் முற்றிலும் முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்க 2016 ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் அந்தியோதயா எனும் பெயரில் குறைந்த கட்டண சலுகை யில் விரைவு ரயில்களை அறிமுகம் செய்தது. அதன்படி நாகர்கோவில்- தாம்பரம் இடையே முற்றிலும் முன்பதிவு இல்லாத அந்தியோதயா விரைவு ரயில் இயக்கப்பட்டு இருந்தது. மாலை 5:15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக மறுநாள் மதியம் ஒரு மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது. மக்களுக்கு பெரிதும் பயன்பட்டு வந்த இந்த ரயில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு, பின் முன்பதிவு ரயிலாக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்தியோதயா ரயில் மீண்டும் முன்பதிவில்லாத ரயில் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக பெங்களூர் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் 16 முதல் இயக்கப்பட இருக்கிறது. அதேபோல் நாகர்கோவில், தாம்பரம் இடையே வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படும். அந்தியோதயா எக்ஸ்பிரஸ் மார்ச் 16 முதல் முற்றிலும் பொதுப்பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் நாகர்கோவில் தாம்பரம்(22657), வியாழன் முதல் தாம்பரம் – நாகர்கோவியில் (22658) ரயில்கள் இயக்கப்படஇருக்கிறது. இந்த ரயில்களில் பயணம் செய்ய இனி டிக்கெட் முன்பதிவு செய்ய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.