தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதை தொடர்ந்தே வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டு பொதுப்போக்குவரத்து இயங்கிக் கொண்டிருக்கின்றன.
அவ்வகையில் புனலூர் – கொல்லம் ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகளை விரிவுபடுத்துவதற்காக செங்கோட்டை – கொல்லம் -செங்கோட்டை (06659-06660) விரைவு சிறப்பு ரயில்கள் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரையிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில் மின்மயமாக்கல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த ரயில்கள் மேலும் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில்கள் அனைத்தும் மார்ச் 22ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் நெல்லை-பாலக்காடு, நெல்லை-பாலருவி மற்றும் சென்னை -கொல்லம், கொல்லம்-சென்னை மெயில் ரயில்கள் வழக்கம்போல இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.