கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப் போவதில்லை என்று நெதர்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
சீனாவின், வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா பரவியது. இது இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி நெதர்லாந்து நாட்டில் அதிகரித்து வருகிறது.
இருப்பினும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு முககவசம் அணிவது கட்டாயமில்லை என்றும், விமான நிலையங்களில் முகக் கவசம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர விடுதிகள் மற்றும் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு டிஜிட்டல் கோவிட்-19 நுழைவு சீட்டு முறையையும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.