பராமரிப்பு பணி காரணமாக புற ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் மார்ச் 23 முதல் 31 வரை பராமரிப்பு பணி காரணமாக புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரல் – கூடூர் மார்க்கத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், பகல் 12:40 மணிக்கு புறப்படும் கடற்கரை – சூளூர்பேட்டை ரயில் கும்மிடிப்பூண்டி வரையும், மதியம் 2:35 மணிக்கு புறப்படும் சென்ட்ரல் – சூளூர்பேட்டை ரயில் கும்மிடிப்பூண்டி வரையும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.