Categories
மாநில செய்திகள்

மார்ச் 30 வரை ரயில்கள் அனைத்தும் ரத்து… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மார்ச் 30 வரை 14 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மதுரை மற்றும் திருநெல்வேலி பிரிவில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அந்த வழியில் செல்ல வேண்டிய 6 ரயில்கள் முழுமையாகவும், 14 வயல்கள் பகுதி அளவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்சி – திருவனந்தபுரம் ரயில்கள் மார்ச் 30 வரையும், எழும்பூர் மற்றும் நாகர்கோவில் ரயில்கள் மார்ச் 25, 26, தாம்பரம் மற்றும் நாகர்கோவில் ரயில்கள் மார்ச் 29, 30 ஆகிய நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |