Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31க்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காவிட்டால் பான் எண் முடக்கம்!

பான் எண்ணை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால் பான் எண் செயலிழந்து விடும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்காக பலமுறை இறுதிக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 31ம் தேதி இறுதிக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி வரை சுமார் 30.75 கோடிக்கும் அதிகமான பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போது வரை 17.58 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை. வருமானவரி தாக்கல் செய்வது, வருமானவரி பிடித்தம் திரும்பப் பெறுவது போன்றவற்றுக்கு பான் எண் இன்றியமையாத தேவையாக உள்ளது. இந்நிலையில் பான் எண்ணை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்கவில்லை எனில் பான் எண் செயலிழந்து விடும்.

இதனால் வருமான வரித்துறைச் சட்டத்தின் கீழ் அனைத்து விளைவுகளுக்கும் பொறுப்பாக நேரிடும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. ஆனாலும் மார்ச் 31, 2020-க்குப் பிறகு பான் எண்ணை ஆதாருடன் இணைப்பவர்களின் பான் எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அந்த நாளிலிருந்து மீண்டும் செல்லுபடியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |