Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10,000 அபராதம்!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வங்கி பரிவர்த்தனை, சொத்து விற்பனை, பங்குசந்தை முதலீடு போன்றவற்றில் தற்போது பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பான்கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

அதன்படி வரும் 31ம் தேதிக்குள் ஆதாரை பான் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் பான் அட்டை செயலற்று போனதாக அறிவிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதை செய்யத் தவறினால் முதல் கட்டமாக பான் எண் செயலற்றதாக மாற்றப்படும்.

செயலற்றதாக பட்டியலிடப்படும் பான் எண்ணை பயன்படுத்துபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. மேலும் வங்கி பரிவர்த்தனை, சொத்து விற்பனை, பங்குசந்தை முதலீடு, மியூச்சுவல் பண்ட்கள் போன்றவற்றில் செயலற்ற பான் எண்ணை பயன்படுத்துவது குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |