Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 வரை தடை நீட்டிப்பு… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சர்வதேச விமான சேவைக்கான தடையை மார்ச் 31ம் தேதி வரை விமான போக்குவரத்து இயக்ககம் விதித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது உலக நாடுகள் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக மற்ற நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்கு வராத வகையில் விமான சேவைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சில நாடுகளில் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சர்வதேச விமான சேவைக்கான தடையை மார்ச் 31ம் தேதி வரை விமான போக்குவரத்து இயக்ககம் விதித்துள்ளது. குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மற்றும் சர்வதேச விமான சேவை அனுமதிக்கப்படும். இந்த தடை சர்வதேச சரக்கு விமான சேவை போக்குவரத்துக்கு பொருந்தாது. மேலும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் சிறப்பு விமான சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |