Categories
மாநில செய்திகள்

மார்னிங் ஸ்கூல், ஈவ்னிங் பார்…. அரசு பள்ளியில் தொடரும் அவலநிலை…. அரசுக்கு கோரிக்கை…..!!!!!

பள்ளிக்கு பாடம் கற்க வரும் மாணவர்கள் தினசரி காலையில் பார்ப்பது மதுபாட்டில்கள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் தான். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை விடுத்தும் ஒருவரும் கண்டு கொள்ளவில்லை என்ற வேதனையில் கோவை குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இருக்கின்றனர். இந்த பள்ளி குறிச்சி குளக்கரை அருகே 3.7 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு 6- 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கின்றனர். சென்ற 4 வருடங்களுக்கு முன்பு வரை 80 என்ற மாணவர் எண்ணிக்கையில் மூடுவிழாவை எதிர்நோக்கி இருந்தது. தற்போது தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்களின் முயற்சியால் 300 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் 10 வருடங்களுக்கும் மேலாக 300 மீட்டர் அளவில் சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுக்க பல இடங்களில் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

இதற்கிடையில் விலையுயர்ந்த பொருட்கள் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுச்சுவர் இன்றி, கதவுகளை பூட்டிச் சென்றாலும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏனெனில் இரவு நேரங்களில் பலர் மது அருந்தவும், தேவையற்ற சில காரியங்களுக்கும் இந்த பள்ளியை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சமூகவிரோதிகள் அருந்திய மதுபாட்டில்களை, தேவையற்ற குப்பைகளை பள்ளி வளாகங்களில் வீசிச் செல்வது சிரமத்தை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் ஒருவர் கூறியபோது “10 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சுவர் கேட்டு வருறோம். ஆனால் வகுப்பறை, கழிவறைக்கு நிதி ஒதுக்க மட்டுமே கல்வித்துறை அதிக கவனம் செலுத்துகிறது. ஆகவே மாணவர்கள், பள்ளியின் உடைமைகளின் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்று கூறினார். அதன்பின் அப்பள்ளி தலைமையாசிரியர் கவிதாவிடம் கேட்டபோது “சுற்றுச்சுவர் அவசியம் தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளோம். மேலும் தன்னார்வலர்களையும் அணுகி வருகிறோம்” என்று கூறினார்.

Categories

Tech |