Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மாறன் திரைப்படத்தை பார்த்த தனுஷே இப்படி சொல்லிவிட்டாரே…! என்ன தெரியுமா…???

கார்த்திக் நரேன் இயக்குகின்ற மாறன் திரைப்படத்தை பார்த்த தனுஷ் தன் கருத்தை கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இதுவரையில் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். வாத்தி திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகிறது. இதன் மூலமாக தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகின்றார். இவரின் கடந்த  இரண்டு திரைப்படமுமே ஓடிடியில்தான் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது மாறன் திரைப்படமும் ஓடிடியில்தான் வெளியாக இருக்கின்றது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்திருக்கின்றனர். தனுஷ் தான் நடித்த திரைப்படங்களை தியேட்டரில் வெளியிட தான் விருப்பம் கொள்வாராம். ஜகமே தந்திரம் திரைப்படமும் தியேட்டரில் வெளியாவதாக இருந்ததாம் ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஓடிடியில் வெளியானது.

இவர் நடிக்கும் மாறன் திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்குகின்றார். மாறன் திரைப்படமானது படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. இடையில் இயக்குனருக்கும் தனுஷுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு சிறிது காலம் நின்று, தயாரிப்பாளருக்காக படத்தில் தனுஷ் நடித்து முடித்தார் என வதந்தி பரவியது. மாறன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனுஷ் படத்தை பார்த்தாராம். ஆனால் தனுஷுக்கே படம் திருப்தியாக இல்லை என கூறப்படுகின்றது. ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ திரைப்படத்தின் கதை அம்சத்தை கொண்டதாக கூறப்படுகின்றது. இதனால் தியேட்டரில் படம் ரிலீசானால் ஓடுமா? இல்லையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தனுஷே ஓடிடியில் வெளியிடுமாறு தயாரிப்பாளருக்கு பரிந்துரைத்துள்ளார். இத்திரைப்படமானது ரிலீசானால் இச்செய்தியில் எவ்வளவு உண்மை உள்ளது என தெரிய வந்துவிடும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |