தனுஷின் மாறன் படத்தின் புதிய அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாறன். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது.
Maaran update — #maaran audio at final stages of work … will have 4 tracks which includes the raging #maaran theme … audio soon @dhanushkraja @SathyaJyothi_ @karthicknaren_M @MalavikaM_ @LahariMusic
— G.V.Prakash Kumar (@gvprakash) November 7, 2021
தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாறன் படத்தின் புதிய அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ‘மாறன் படத்தின் ஆடியோ விரைவில் வெளியாகும்’ என தெரிவித்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.