கடந்த 2020 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இந்த திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றதோடு பல சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.
அந்த வகையில் ஜப்பானின் ஒசாகா தமிழ் திரைப்பட விழாவில் ஆறு விருதுகளை இந்த திரைப்படம் வென்று குவித்துள்ளது. அதில் சுதா கொங்கராவுக்கும், சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி பிரகாஷுக்கும், சிறந்த கலை இயக்குநர் விருது ஜாக்கிக்கும், சிறந்த தயாரிப்பு நிறுவனம், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட ஆறு விருதுகளை இந்த திரைப்படம் வென்றுள்ளது.