Categories
தேசிய செய்திகள்

“மாறி மாறி செருப்பால் அடித்துக் கொள்ளுங்கள்”… ஊரை விட்டு ஓடிய காதல் ஜோடிக்கு… பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடியை அழைத்து வந்த கிராம மக்கள் பஞ்சாயத்தில் ஒருவரை ஒருவர் செருப்பால் அடித்துக் கொள்ளுங்கள் என்ற தண்டனையை வழங்கி உள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பகுதியை சேர்ந்த காதல் ஜோடி கிராமத்தில் இருந்து வெளியேறி சென்றதாக கூறப்படுகிறது. சக்கரத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பாதி வழியில் பெட்ரோல் நின்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் இவர்களை விசாரித்தனர் . ஒருவரை ஒருவர் முரண்பாடாக பதில் அளித்ததால் அவரது பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி அவர்களை அழைத்து செல்ல அறிவுறுத்தினார்.

பின்னர் அங்கு வந்த அவர்களை மீட்ட பெற்றோர்கள் கிராம பஞ்சாயத்தில் அவர்கள் செய்த குற்றத்திற்காக ஒருவரை ஒருவர் செருப்பால் அடித்துக் கொள்ளுங்கள் என்று நூதன போராட்டத்தை வழங்கினார் .கிராமத்தின் சட்டப்படி ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாதாம். காதல் ஜோடிகள் அதனால்தான் அங்கிருந்து வெளியேறினார்கள் என்று தெரிய வந்தது. இதையடுத்து உத்திரபிரதேசம் காவல்துறையினர் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்து எந்த ஒரு வழக்குப் பதிவு செய்யவில்லை.

Categories

Tech |