Categories
சினிமா

மாறுபட்ட கூட்டணியில் உருவான…. பிரபல இயக்குனர் திரைப்படம்….. எகிறும் எதிர்பார்ப்பு….!!!

இயக்குனர் பா ரஞ்சித்தின் “நட்சத்திரம் நகர்கிறது” இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த அட்டக்கத்தி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இதனை அடுத்து இவர் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அவருடன் காலா ,கபாலி போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தார். இதனை அடுத்து ரஞ்சித் படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் தயாரிக்கவும் தொடங்கினார். நீலம் ப்ரொடக்ஷன் மூலமாக பரியேறும் பெருமாள் என்ற படத்தை தயாரித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சர்பட்டா பரம்பரை திரைப்படம் ஓ டிடியில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இவர் முற்றிலும் மாறுபட்ட கூட்டணியில் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அசோக் செல்வன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நாயகர்களாக நடிக்க சர்பட்டா புகழ் துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கின்றார்.அறிமுக இசையமைப்பாளர் டென்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Categories

Tech |