Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

மாற்றத்திற்கு தயாராக இருங்கள்… ரசிகர்களிடம் கூறிய சூர்யா…!!!

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சூர்யா எதற்கும் தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் கடைசியாக ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. தற்போது இவர் பாண்டியராஜ் இயக்குகின்ற எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு முடிவடைந்தது என அண்மையில் செய்தி வெளியானது.

இந்நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது சூர்யா எனது செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும் அது உங்களின் நலனுக்காகவே. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் யாரும் பேசாததை துணிந்து கூறியுள்ளோம். எனது ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் சில நபர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. அது தற்காலிகமே. மேலும் எனது ரசிகர்களுக்கும் இதனால் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் ரசிகர்கள் மிகவும் பொறுமையுடன் கையாண்டார்கள். அதற்கு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இழப்பதற்கு நிறைய இருந்தால் தான் பிறகு அதிகமாக அடைய முடியும். எனவே மாற்றத்திற்கு தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |