Categories
உலக செய்திகள் கொரோனா

மாற்றமடைந்த புதிய கொரோனா…. பாதிப்பு இருமடங்கு ஆகுமா….? சுகாதார நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!

புதிதாக பரவும் கொரோனா தொற்று 12 நாட்களுக்கு ஒரு முறை இரு மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனி சுகாதார நிறுவனமான ராபர்ட் கோட்ஸ் நிறுவனம் அறிவித்த அறிக்கையில்  கொரோனாவின் தாக்கம் ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் எனவும் கடந்த டிசம்பர் 23 இல் கணக்கின்படி ஒரு வாரத்திற்கு 100,000 பேருக்கு 214 என்ற கணக்கில் அந்த எண்ணிக்கை 100,000 பேருக்கு 350 என அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

தற்போது உள்ள கொரோனா தொகை அதிகரிப்புக்கு பிரிட்டன் வகை கொரோனா தான் காரணம் எனவும் இந்நிலையில் ஜெர்மனியிலுள்ள 50%  கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரித்தானிய வகை வைரஸ் தான் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் அதிக அளவு பரவும் எனவும் தற்போதைய வைரஸை விட பல மடங்கு ஆபத்தானது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வைரஸ் 12 நாட்களுக்கு ஒரு முறை இருமடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 64 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 67 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |