இலங்கையில் புதிய கொரோனா வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நோய் தடுப்பில் நிபுணர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவா்தனபுரா பல்கலைக்கழகத்தில் நோய்த்தடுப்பியல் மற்றும் அணு அறிவியல் துறைத் தலைவரான நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நீலிகா மாளவிகே கூறுகையில் இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் இது பழைய கொரோனா வைரசை விட பல மடங்கு வேகமாக பரவக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தவைரஸ் காற்றில் பரவி ஒரு மணி நேரம் உயிருடன் இருக்கும் என்றும் உடலுக்குள் புகுந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு பிறகே பாதிப்பு தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கை அரசு கடந்த வாரம் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த வைரஸ் ஏராளமானோருக்கு பரவி இருக்கலாம் என தெரிவித்துள்ளது.