Categories
தேசிய செய்திகள்

மாற்றான் படம் போல….. ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்.. பிரிக்கப்பட்ட அக்கா- தங்கை நெகிழ்ச்சி பேட்டி…!!

மேற்கு வங்கத்தில் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் அவர்களது வாழ்க்கையின் சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2002 ஆம் வருடம் மேற்கு வங்கத்தில் ஒட்டி பிறந்த இரட்டைகளான மோனாவும், லிசாவும் தங்களது சுவாரசியமான வாழ்க்கையை,  கதை போல சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு பேட்டி அளித்திருக்கின்றனர். கடந்த நவம்பர் 1 அக்டோபர் 2002 ஆம் வருடம் பச்சிளம் குழந்தைகளாக இருந்த இவர்களுக்கு அப்போதே 30 மருத்துவர்கள் தலைமையிலான குழு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர்.

இது தொடர்பாக  மோனா-லிசாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவில் இருந்த மருத்துவர் நரேந்திரநாத் முகர்ஜி பேசும்போது, இந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு நுரையீரல் மற்றும் இதயம் இருந்தாலும் கூட அவர்களுக்கு ஒரு சில உள்ளுறுப்புகள் ஒன்றாகவே இருந்தது. அதன் காரணமாக அறுவை சிகிச்சைகளின் சவால்கள் நிறைந்திருந்தது. இந்த அறுவை சிகிச்சை ஆனது சுமார் 8 மணி நேரம் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தாங்கள் இருவரும் இரட்டையர்கள் என்பது அவர்களுக்கு நீண்ட நாட்கள் கழித்து தான் அவர்களுடைய அம்மா தெரிவித்துள்ளார். ஒட்டி பிறந்த அவர்களின் இந்த வாழ்க்கையை திருமணத்திற்கு முன்பாக இருவரும் தனது கணவர் வீட்டுக்காரர்களிடம் கூறியதாகவும்,  அவர்கள் இதனை ஏற்று தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கின்றனர். தற்போது மோனாவுக்கு 15 மாத பெண் குழந்தையும், லிசாவுக்கு 12 மாத பெண் குழந்தையும் இருக்கின்றனர்.

Categories

Tech |