தமிழகத்தில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறிவரும் வாக்குறுதிகள் அவரது ரசிகர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவர் வேலூரில் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது அரசு முதலீட்டில் ஒவ்வொரு வீட்டிற்கும் கணினி வழங்கப்படும். அது இலவசம் என்று நினைக்க வேண்டாம்.மனித வளத்தின் மீது அரசின் முதலீடாக தான் கருத வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் கணினி சென்றடைந்த பிறகு அரசுக்கும் வீடுகளுக்கும் இடையில் நேரடித் தொடர்பு ஏற்பட்டு விடும். அரசின் சேவைகளை எளிதில் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் திமுக மற்றும் அதிமுக சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன்னரே லேப்டாப் வழங்கும் திட்டம் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதனை நடைமுறைப்படுத்தியது. அதனால் லட்சக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். இதனையெல்லாம் முதலீடாக கருதாத கமல், அப்போது இலவசம் என்றும், பிச்சைக்காரர்கள் தான் இலவசம் வாங்குவார்கள் என்றும் ஏற்படுத்தினார். அவனைப்போலவே கமல் இன்று வீட்டுக்குவீடு கணினி வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு சம்பளம் வழங்கப்படும் என்றெல்லாம் இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார். இது அவரது ரசிகர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது.