Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மருத்துவமனை முகாம்…. போதிய வசதிகள் இல்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்….!!

அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்காக மாதத்தில் 2 முறையாவது மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாதம் 2 முறையாவது மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றது. இந்நிலையில் குழந்தைகள் நல சிறப்பு கட்டிடத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. அதில் பல பகுதிகளிலிருந்து 500-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் சிகிச்சைக்கு வரத் தொடங்கியுள்ளனர். அதன்பின் மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனால் முகாமில் மாற்றுத்திறனாளிகள் தேவையான தாழ்வான படிக்கட்டுகள், உணவு, குடிநீர், சக்கர நாற்காலிகள் ஆகிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனஅவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அனைத்து மாற்று திறனாளிகள் சங்கம் சார்பாக முகாமில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். பின்னர் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் ரயில்வே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதன் காரணத்தினால் ரயில்வே சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |