உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாகராஜில் மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் வகையில் நடைபெற்ற நலத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 26 ஆயிரம் பயனாளர்களுக்கு ரூ.19 கோடி மதிப்பிலான சாதனங்கள் வழங்கப்பட்டது. இதில் பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு மாற்றுத்திறனுள்ள இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சிறுவர்களின் பங்களிப்பும் அவசியமானது.
Prime Minister Narendra Modi distributes assistive aids&devices to senior citizens & the differently-abled, at a distribution camp in Prayagraj. pic.twitter.com/rbX2VHEtzB
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 29, 2020
தொழில்துறை, சேவைத்துறை அல்லது விளையாட்டுத் துறையாக இருந்தாலும், மாற்றுத்திறனாளிகளின் திறமைகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகின்றன. அனைத்து மக்களுக்கும் நன்மை மற்றும் நீதி கிடைப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இது அனைவருக்கும் வளர்ச்சி அடிப்படையாகும்.
இந்த சிந்தனையினால்தான் நமது அரசாங்கம் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வருகிறது. 130 கோடி குடிமக்களின் நலனைக் கவனிப்பதே எங்கள் முதல் முன்னுரிமை என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் தற்போதைய மத்திய பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் நலத்திட்ட முகாம்களை அமைத்து அனைவருக்கும் தேவையான நலத்திட்டங்களை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.