தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறு இருப்பதால் அவர்களுக்கென்று சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று கோவை மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறுகிறது. அதனால் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.