Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை…. ரூ.500 உயர்வு… தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு….!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை அதிகரிப்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான விதிகளில் திருத்தம் செய்யும் வரைவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 56% முதல் 100% வரை ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,000 இருந்து ரூ.3,500 ஆகவும், 66 சதவீதம் முதல் 85 சதவீதம் வரைஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆகவும் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், 40 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், 60 வயதுக்கு மேல் 79 வயது வரை உள்ள ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,200-ல் இருந்து ரூ.2,700 ஆகவும் உயர்த்தப்படடுள்ளது. 80 வயதை கடந்த ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,300-ல் இருந்து ரூ.3,800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |