தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.
அங்கு அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்கான ஆலோசனை, தேசிய அடையாள அட்டை பெறுதல், நலவாரியத்தில் பதிவு செய்தல், அரசு நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள் பெற ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ குழுவினர் கண் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.