சேலத்தில் 31,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நமக்கு நாமே திட்டத்தை தொடங்கி வைத்த விழாவில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், திராவிட இயக்க வரலாற்றிலேயே பெரும் பங்கு வகித்த இடம் சேலம். பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது சேலம் மாவட்டம். கூட்டு குடிநீர் திட்டம், பெரியார் பல்கலைக்கழகம், சேலம் உருக்காலை உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்தது.
சேலம் மாவட்டத்திற்கு ஏற்கனவே செய்த திட்டங்களை விட அதிகமான திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. என்று பேசினார். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.