மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்குவதற்காக கூடுதல் நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக மகளிர், குழந்தைகள் நலம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து நேற்று நடந்த சட்டசபை கேள்வி நேரத்தில் அமைச்சர் கூறியுள்ளதாவது, கடந்த ஒன்பது ஆண்டுகளில், மாநிலத்தில் 3,033 மூன்று சக்கர வாகனங்களானது மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் எம்எல்ஏக்கள் நிதியிலிருந்து இந்த மூன்று சக்கர நாற்காலி வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். இதை அடுத்து மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையினை மேம்படுத்த இந்த மூன்று சக்கர வாகனங்கள் அதிகம் தேவை. எனவே பல வழிகளில் வருவாய் சேகரித்து மூன்று சக்கர நாற்காலிகள் வழங்கப்பட உள்ளதாகவும் மேலும் அவர்களுக்கு வழங்கும் மாத நிதி உதவியை அதிகரிப்பது பற்றியும் பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து காங்., — சரத் பச்சேகவுடா கூறியதாவது, எங்களின் ஹொஸ்கோட் தொகுதியில், 1,700 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கும் மூன்று சக்கர நாற்காலி தாருங்கள் என கேட்டுள்ளார்.
இதையடுத்து, காங்., — ரமேஷ்குமார் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு, நீங்கள் மூன்று சக்கர வாகனங்கள் வழங்காவிட்டால், அவர்களை நிரந்தர ஊனமுற்றவர்களாக ஆக்கியதாகிவிடும் எனவும் என்னுடைய தொகுதியில் 100 பேரின் பட்டியல் தயாரித்துள்ளேன். ஆனால் நிதியுதவி இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களை, எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பு கொண்டால், உதவி கிடைப்பது கஷ்டம். அரசே இதற்காக முயற்சித்தால், உதவி கிடைக்கும்.இவ்வாறு விவாதமானது நடைபெற்றது.