தமிழகத்தில் அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் உயர்மட்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி துறை செயலாளர் தலைவராகவும்,தொழிலாளர் நலத்துறை மனித வள மேலாண்மை துறை செயலாளர்கள் உள்ளிட்ட 9 பேர் குழுவை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவானது அனைத்து அரசு துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் வழங்கப்படும் வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை கண்காணிக்கும். மாற்றுத்திறனாளிகள் பணிபுரிவதற்கு உகந்த இடங்கள் கண்டறியப்படுவதையும், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்படுவதையும் இந்த குழு கண்காணிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.