Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு…. வெளியான அறிவிப்பு…!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசு கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தது. இந்த அறிவிப்பை செயல்படுத்துவது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் 40 சதவீதத்திற்கும் மேல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அட்டை மற்றும் அரசின் சான்றிதழ் வைத்திருந்தால் அவர்களுக்கு நிபந்தனை இன்றி மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு வீடுகள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிறகு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒப்புதலின் பேரில்தான் வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கும் வீடுகளில் 5 சதவீத வீடுகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். இந்த வீடுகள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒருவேளை விண்ணப்பதாரருக்கு தகுதி இல்லாத பட்சத்தில் அந்த வீடுகளை வேறு நபருக்கு ஒதுக்கலாம்.‌

இதனையடுத்து மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் வீடுகள் அவர்கள் எளிதில் செல்லும் விதத்தில் தங்கு தடையற்ற இடத்தில் அமைந்திட வேண்டும். இதில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டால் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் உள்ள வீடுகளை ஒதுக்க வேண்டும். இந்த உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்த்குமார் பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |