சென்னை மெரினா கடற்கரையை மாற்றுத்திறனாளிகளும் கண்டு ரசிக்கும் விதமான புதிய சிறப்பு பாதை நேற்று திறக்கப்பட்டது.
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை நேற்று திறக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தர் இல்லம் எதிரே இருந்து 263 மீட்டர் மணற்பரப்புக்கு கடல் நீர் வரை 3 மீட்டர் அகலத்தில் சிறப்பு பாதை அமைக்கப்பட்டு உள்ளது. மரப்பாதையில் சென்று மாற்றுத்திறனாளிகளும் கடலின் அழகை ரசித்திட இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.