Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1500, இனி வீட்டிலிருந்தே வேலை…. முதல் பஸ் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் உலக மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளிகள் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உட்பட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

ஒரு மாற்றுத்திறனாளி கூட வருத்தப்படக் கூடாது என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளிகள் அலுவலகங்களுக்கு சென்று பணி செய்யாமல் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்ற சூழலை விரைவில் உருவாக்க உள்ளோம். ஜனவரி மாதம் முதல் இது நடைமுறைக்கு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |