தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் விர்ச்சு தொண்டு நிறுவனம், மாவட்ட நிர்வாகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி அதாவது நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த முகாமில் தொழில் பயிற்சி மற்றும் கடனுதவி போன்ற பல வாய்ப்புகளும் வழங்கப்படும். 18 வயது முதல் 35 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.