சர்வேதச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
வருடந்தோறும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளின் வால்வை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 40 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் 10,84,000 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கியுள்ளார்.
அப்போது 9 பேருக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், 8 பேருக்கு பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள், 5 பேருக்கு இலவச பஸ் பாஸ் அட்டை, 7 பேருக்கு சக்கர நாற்காலிகள், 8 பேருக்கு அதிரும் மடக்கு கோல்கள், 3 பேருக்கு வங்கி கடன் மானியம், மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமுருக தட்சணாமூர்த்தி உட்பட அதிகாரிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.