Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் நலனுக்காக”…. ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்…. கலெக்டர் அறிவிப்பு….!!!

நியாயவிலைக் கடைகளில் சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நியாயவிலைக் கடைககளுக்கு  சென்று பொருட்கள் வாங்குவதில் மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நியாயவிலைக் கடைகளில் உள்ள படிவத்தினை பெற்று அதில் தங்களுக்கு பதிலாக பொருட்கள் வாங்கும் மாற்று நபரின் விவரங்கள் குறித்து பூர்த்தி செய்ய வேண்டும்.

அந்தப் படிவத்தை குடிமைப்பொருள் தாசில்தார் அல்லது வட்ட வழங்கள் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலமாக அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பாக நியாயவிலைக் கடைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். இந்த முகாம் மே மாத முதல் வாரத்தில் நடத்தப்படும். எனவே இந்த முகாமினை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |