Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி அடித்து சித்திரவதை…. 3 போலீசார் பணி இடைநீக்கம்… ஐஜி அதிரடி உத்தரவு…!!!

புதுக்கோட்டை மாவட்டபோலீஸ் நிலையத்தித்தில் உள்ள கவரப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். அவருக்கு சங்கர் வயது(29) என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகன் உள்ளார்.  சம்பவத்தன்று சங்கர் அப்பகுதியில் நடந்த சட்ட விரோதமான மது விற்பனை குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு புகார் அளித்ததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் சங்கரின் வீட்டிற்கு வந்த விராலிமலை போலீசார் சிலர், எந்த பிரச்சனையாக இருந்தாலும் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் . அதைவிட்டு கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்பின் இருவருக்குமிடையே வாக்குவாதம் பெரிதாகவே போலீஸ் சங்கரை லத்தியால் அடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின் போலீஸ் நிலையத்தில்  வைத்து போலீஸ்காரர்கள் அசோக்குமார், பிரபு ,செந்தில் என்ற மூவரும் சேர்ந்து அவரை அடித்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சங்கரின் தாயார், போலீசார் தாக்கியதில் காயமடைந்த தம் மகனை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சங்கரின் வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்த வக்கீல் பழனியப்பன் என்பவர் அதை மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து மாற்றுத்திறனாளியை தாக்கிய போலீசார்கள் பிரபு ,செந்தில், அசோக் குமார் ஆகிய மூவரையும் ஐஜி உத்தரவுபடி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் அவர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து 3 போலீசார் மீதும் விராலிமலை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |