சென்னை மாநிலக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய முதல்வர் மு க ஸ்டாலின், சீனியர் என்ற முறையில் மாணவர்களை வாழ்த்த வந்திருக்கிறேன்.
மாநில கல்லூரியில் கலைஞர் பெயரில் 2000 பேர் அமரக்கூடிய அரங்கம் அமைக்கப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மாநில கல்லூரி வளாகத்திலேயே தங்கும் விடுதி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.