மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறவிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். மாற்று திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார். இந்த முகாம் வருகிற வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த முகாமில் 18 வயதிற்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம் எனவும், தங்களுடைய படிப்பு சான்றிதழ் மற்றும் சுய விவரங்களை எடுத்து வரவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்ட பதிவுகள் ரத்து செய்யப்படாது என ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.