Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மாற்றுத்திறனாளி” பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு “10 ஆண்டுகள்” சிறை… அதிரடி தீர்ப்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொப்பம்பட்டி வடக்கு தெருவில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு 18 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீரமணி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெண்ணின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் வீரமணிக்கு 2 லட்ச ரூபாய் அபராதமும், 10 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |