Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் செல்போனில் ஆட்சியருக்கு விடுத்த கோரிக்கை”…. உடனடி நடவடிக்கை….!!!!!

மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் செல்போனில் விடுத்த கோரிக்கைக்கு ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனைக்குட்பட்ட காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெபமாலை என்பவரின் மனைவி சசிகலா. காது கேளாத மாற்று திறனாளியான இவருக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் குளறுபடி ஏற்பட்டு சிரமப்பட்டு வந்த நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு குரல் செய்தி மூலம் சசிகலா கோரிக்கையை தெரிவித்ததையடுத்து ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க தாசில்தருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதை தொடர்ந்து தாசில்தார் செந்தில் வேல்முருகன் உரிய ஆவணங்களை பரிசீலனை செய்து திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இவர்களது குழந்தை பிறந்திருந்தால் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்ததின் அடிப்படையில் ஒரு வாரத்திற்குள் இரண்டு குழந்தைகளின் பிறப்பு பதிவிலும் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Categories

Tech |